பனீர் பட்டர் மசாலா..

by Lifestyle Editor

தேவையான பொருள்கள்:

பனீர் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 6

கஸ்தூரி மேத்தி – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்பதாளிக்க தேவையானவை :

வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – 1

ஏலக்காய் – 2

பிரிஞ்சி இலை – 1

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு சூடானதும் சிறிய சதுரமாக வெட்டிய பன்னீர் துண்டுகளை போட்டு மிதமான தீயில் லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை தனி தனியாக போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்.

இவை அனைத்தும் ஆறியதும் தனி தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.

பிறகு அதனுடன் இஞ்சி பூண்டை பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.

அதன் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி, கரம் மசாலா, கஸ்தூரி மேதி இலை சேர்த்துக் கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இவை கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.

Related Posts

Leave a Comment