மாங்காய் பச்சடி ரெசிபி .

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

வெட்டிய பச்சை மாங்காய் – ஒன்றரை கப்

பொடி செய்த வெல்லம் – கால் கப்

உப்பு – ⅛ தேக்கரண்டி

தேங்காய் துருவல் – கால் கப்

மஞ்சள் தூள் – ⅛ தேக்கரண்டி

கீறிய பச்சை மிளகாய் – 1

தாளிக்க:

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – ½ தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கீறிய பச்சை மிளகாய் – 1 (விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்)

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

முதலில் வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லம் நன்றாக கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து, மாங்காயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

கொதி வந்தவுடன், தண்ணீரை முழுமையாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மாங்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கிண்டி விட வேண்டும்.

மாங்காய் நன்றாக சாஃப்ட் ஆக ஆகும் வரை கிண்டி விடுங்கள். அதாவது மாங்காய் கண்ணாடி போன்று தெரியும் வரை சமைக்கவும். விடாமல் கிண்டி விட வேண்டும், இல்லையென்றால் அடிப்பிடித்து விடலாம்.

அடுத்து, வெல்லத்தை ஃபில்டர் செய்து இதில் சேர்க்க வேண்டும். துருவிய தேங்காயை நன்றாக ஸ்மூத் பேஸ்ட் ஆக அரைத்துக் கொண்டு இதில் சேர்க்கவும்.

2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விடவும். அவ்வளவு தான், எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கீறிய பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கி விடலாம்.

Related Posts

Leave a Comment