கார சட்னி செட்டிநாடு சுவையில் ..!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 3 நறுக்கியது
பூண்டு – 2 பற்கள்
தக்காளி – 1 நறுக்கியது
பியாத்கே மிளகாய் – 12
கல் உப்பு – 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை :

முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாய் சூடானதும் அதில், எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர், அதில் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு பியாத்கே மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கவும்.

இதையடுத்து, நன்கு ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.

இப்போது, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலந்து இறக்க சுவையான கார சட்னி தயார் ….

Related Posts

Leave a Comment