மட்டன் உப்பு கறி…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

மட்டன் – 500 கிராம்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கல் உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – தேவைக்கேற்ப

மற்ற பொருள்கள் :

நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்

தக்காளி – 2

காய்ந்த குண்டு மிளகாய் – 20

முழு நாட்டு பூண்டு – 2

கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் குக்கரில் அலசிய மட்டன், மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த குண்டு மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் குண்டு மிளகாயை கரண்டி கொண்டு ஓரளவிற்கு மசித்து கொள்ளவும். அப்போதுதான் அதன் கரம் கறியில் இறங்கும்.

பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

சில நிமிடங்கள் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி கறி நன்றாக வேகும்வரை சமைக்கவும்.

குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

மட்டன் நன்றாக வெந்து தண்ணீரெல்லாம் வற்றி வறுபட்டவுடன் உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அதன் பின் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவுதான் சுவைமிக்க காரமான மட்டன் உப்பு கறி ரெடி…

Related Posts

Leave a Comment