மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்.. குஜராத் அணிக்கு முதல் வெற்றி..

by Lifestyle Editor

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. கேப்டன் பெத் மூனி மிக அபாரமாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாட தொடங்கிய நிலையில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் மகளிர் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து குஜராத் அணி புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளது.

Related Posts

Leave a Comment