இமாச்சல பிரதேசம்.. மகளிர்களுக்கு மாதம் ரூ.1500.. தகுதி தேவையில்லை..!

by Lifestyle Editor

தமிழகம் உள்பட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1000 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் எந்தவித தகுதியும் தேவையில்லை என்றும் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லியை அடுத்து தற்போது இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் பாகுபாடு இன்றி அனைத்து பெண்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இமாச்சல பிரதேசம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் தான் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் மகளிர்க்கு மாதம் பணம் என்ற திட்டம் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் மட்டும்தான் தகுதி உள்ள பெண்களுக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அனைத்து பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

Related Posts

Leave a Comment