அதிகரித்து வரும் வெப்பநிலை: கல்வி அமைச்சு எச்சரிக்கை!

by Lifestyle Editor

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment