வெள்ளரிக்காயின் மருத்துவ நன்மைகள்!

by Lifestyle Editor

வெள்ளரிக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளதால், வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டை குறைத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

அதேபோல் வெள்ளரிக்காய் சாப்பிடுவது புற்றுநோய் செல்களில் இருந்து எதிர்த்து போராடவும், மலச்சிக்கல் பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் பயன்படுகிறது.

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முக்கிய பங்கு வைக்கிறது.

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சருமத்திற்கும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.

Related Posts

Leave a Comment