அம்மை நோய் வராமல் தடுக்க உதவும் 6 உணவுகள்..

by Lifestyle Editor

ஏற்கனவே சிக்கன் குனியா வந்தவர்களுக்கு அம்மை நோய் எளிதில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த அம்மை நோய் ’வெரிசெல்லா வைரஸ்’ தாக்குதலால் ஏற்படுகிறது. காற்றில் பரவும் இந்த நோய் எளிதில் பரவும். எனவே ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருப்பது அவசியம். அப்படி சிக்கன் பாக்ஸ் எனப்படும் அம்மை நோய் வராமல் இருக்க இந்த 5 உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.

முருங்கை பூ – இந்த நேரத்தில் பல்வேறு காற்றில் பரவும் நோய்களைத் தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முருங்கை பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வேப்பிலை: வேப்ப இலைகள் கிருமி நாசினி தன்மை கொண்டது. குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலைகளை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கவும். வெரிசெல்லா வைரஸை எதிர்த்துப் போராட வேப்ப இலைகள் உதவுகின்றன.

முட்டைக்கோஸ்: இந்த காய்கறியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் காற்றில் பரவும் நோய்களைத் தடுக்கின்றன.

கேரட்: இந்த காய்கறியில் உள்ள பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. கேரட் எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தயிர்: தயிர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிரில் உள்ள புரோபயாடிக் உள்ளடக்கம் உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

இளநீர் : கோடைக்காலத்தில் அடிக்கடி குறையும் நீர்ச்சத்தை ஈடு கட்ட இளநீர் சிறந்த பானம். எனவே இளநீர் உடலின் நீரேற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்த பானம்.

Related Posts

Leave a Comment