124
பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் தாதியர்களில் 50 வீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்த சம்பளம் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாக வேலையில் இருந்து வெளியேறலாம் என பிரித்தானிய அரச தாதியர் கல்லூரி எச்சரித்துள்ளது.
ஊழியர் பற்றாக்குறையால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள தேசிய சுகாதார சேவையில் இருந்து, மேலும் ஊழியர்கள் வெளியேறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகமான ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் மேலதிக நிதியை ஒதுக்க வேண்டும் என அரச தாதியர் கல்லூரி கோரிக்கை விடுத்துள்ளது.