இந்தியாவிலிருந்து முதல்முறையாக விண்வெளி செல்லும் வீரர்கள்!

by Lifestyle Editor

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்களுக்கு ஆய்வு விண்கலன்களை அனுப்பி நாசா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் விண்வெளி மையங்களுக்கு இணையான சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக சில வீரர்களை தேர்வு செய்து ரஷ்யா அனுப்பி அங்குள்ள விண்வெளி மையத்தில் விண்வெளி பயணம் மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த வீரர்களில் இருந்து நால்வர் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக விண்வெளி பயணத்தை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக விண்வெளி செல்ல உள்ள இந்திய வீரர்களின் பெயர்களை அறிவித்தார். அதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் (குரூப் கேப்டன்), அஜித் கிருஷ்ணன் (குரூப் கேப்டன்), அங்கத் பிரதாப் (குரூப் கேப்டன்), சுபான்ஷு சுக்லா (விங் கமாண்டர்) ஆகிய நால்வர்தான் இந்தியாவிலிருந்து முதல்முறையாக விண்வெளி செல்ல உள்ள வீரர்கள்.இந்த அறிவிப்பு விண்வெளி ஆராய்ச்ச்சியில் இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வை பறைசாற்றுவதாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்து, வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment