77
சுங்க அதிகாரிகள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் 950 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளரும் நிதியமைச்சின் மேலதிக செயலாளரும் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சிவ தெரிவித்துள்ளார்.