நரைத்துப் போன தலைமுடியை மீண்டும் கருமையாக்க ..

by Lifestyle Editor

கீரை :

இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் A, C நிறைந்த கீரை மயிர்க்கால்களின் ஆரோக்கியம் மற்றும் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இரும்பு சத்து குறைபாடு இளநரையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதன் காரணமாக கீரை இந்த ஜூஸின் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது.

கேரட் :

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் காணப்படுகிறது. இது நமது உடலில் வைட்டமின் A ஆக மாற்றப்படுகிறது. இளநரையுடன் தொடர்புடைய சீபம் உற்பத்தி, தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்தல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு வைட்டமின் A அவசியமாக கருதப்படுகிறது.

பீட்ரூட் :

பீட்ரூட்டில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக வைட்டமின் C அதிகமாக இருக்கிறது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இது தலைமுடியின் வலிமை மற்றும் நிறத்திற்கு அத்தியாவசியமானது. ஆகவே இது இளநரை ஏற்படுவதை குறைக்கிறது.

நெல்லிக்காய் :

வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களின் ஊட்டச்சத்து மூலமாக நெல்லிக்காய் அமைகிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், இளநரையை தவிர்ப்பதற்கும், இயற்கையான கருமையை தலைமுடிக்கு தருவதற்கும் நெல்லிக்காய் ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஞ்சி :

இஞ்சியில் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக்கூடிய வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மயிர்க்கால்கள் வலிமையாக இருந்தால் தலைமுடி வலிமையாக இருக்கும். மேலும் நரைக்கும் செயல்முறை மெதுவாகும்.

எலுமிச்சை :

வைட்டமின் C அதிகம் காணப்படும் எலுமிச்சை கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. மேலும் இந்த சிட்ரஸ் பழம் ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளித்து, இளநரை ஏற்படுவதை தவிர்க்கிறது.

புதினா இலைகள் :

புதினா இலைகள் இந்த சாற்றிற்கு ஆன்டி-ஆக்சிடன்ட்களை அளிக்கிறது. இளநரையுடன் தொடர்புடைய ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் போராடுகின்றன.

செய்முறை : முதலில் அனைத்து காய்கறிகளையும் சுத்தமாக கழுவவும். கீரை, கேரட், பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு எலுமிச்சை சாறு, ஒரு கையளவு புதினா இலைகளை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் தண்ணீர் ஊற்றவும். இந்த கலவையை அரைத்து குடிக்கும் பதத்திற்கு கொண்டு வரவும். தேவைப்பட்டால் வடிக்கட்டிக் கொள்ளலாம். ஆனால் வடிகட்டாமல் குடிப்பது உங்களுக்கு கூடுதல் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். இந்த சாற்றை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பருகுவது நல்ல பலன் அளிக்கும்.

Related Posts

Leave a Comment