பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

by Lifestyle Editor

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்தது.

பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர் லால் கிருஷ்ண அத்வானி. எல்கே அத்வானி இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார். 1980 டிசம்பரில் பாரதீய ஜனதாக் கட்சியை அடல் பிகாரி வாஜ்பாயுடன் சேர்ந்து உருவாக்கினார்.பாஜக உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணி ஆற்றியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அத்துடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்.கே அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment