கருவளையம் தொல்லையா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.!

by Lifestyle Editor

வேக வேகமா ஓடி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இரவில் கூட ஓய்வென்பது இல்லாமல் இருக்கிறது. இதனால் நிறைய வியாதிகள் உருவாகுவதோடு நம் முகம் கூட பொலிவில்லாமல் போகிறது. சரியான தூக்கம் மற்றும் முறையான உணவு இல்லாததால் வரக்கூடிய மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று கருவளையம்.

இது எல்லாருக்கும் சகஜமாக வரும் ஒரு பிரச்சனையாகி விட்டது. இதனை தடுப்பதற்கு கண்டிப்பாக 8 மணி நேரம் தூக்கம் தேவை. இதோடு சேர்த்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில டிப்ஸயும் ஃபாலோ செய்தால் கருவளையம் பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யலாம்.

இயற்கையான முறையில் கருவளைத்தை நீக்க விரும்பினால் எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு நாளைக்கு 2 முறை கண்களுக்கு கீழ் தடவி வந்தால், கருவளையம் குறைந்துவிடும். தினமும் படுக்கும் முன்பு வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் நீங்கும்.

தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு 2 முறை சிறிது புதினா சேர்த்து குடித்து வந்தால் கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும். பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

இரவில் கண்களைச் சுற்றி, பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வந்தால், கரு வளையத்திலிருந்து விடுதலை பெறலாம். மேல சொன்னதெல்லாம் வாரத்தில் 2 முறை அல்லது 3 முறை செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment