முடி கருகருனு வளர வீட்டு வைத்தியம்..

by Lifestyle Editor

யாருக்குதான் பளபளப்பான, அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இவை எல்லாவற்றையும் பெற சரியான கூந்தல் பராமரிப்பு முறையை கடைபிடிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான மூலிகைகள் மற்றும் இயற்கை வைத்தியங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவை அவசியம்.

குறிப்பாக இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பல மூலிகைகள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட கூடியவையாகவும், ஸ்கால்ப் (scalp) ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியின் வேர்களை ஸ்ட்ராங்காக்கவும் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தல் வளர்ச்சிக்கு உதவ கூடிய சில அற்புத மூலிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

நெல்லிக்காய் நம்முடைய கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக சிறந்த மூலிகை என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை நம்முடைய கூந்தலின் வேர்க்கால்களை நன்கு வலுப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முன்கூட்டியே கூந்தல் நரைப்பதை தடுக்க உதவுகிறது. எனவே நெல்லியை ஆயில், பவுடர் அல்லது தேநீர் போன்ற பல வடிவங்களில் பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கூந்தல் ஆரோக்கியத்தை பொருத்தவரை “மூலிகைகளின் ராஜா’ என்று பிருங்கராஜ் குறிப்பிடப்படுகிறது. பிருங்கராஜ் ஆயில் அல்லது பவுடர் முடி உதிர்வு பிரச்னைக்கு நிவாரணம் அளித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் இது தலையின் மேற்புறத்தில் மற்றும் கூந்தலுக்கு அடியில் இருக்கும் ஸ்கால்ப்பிற்கு நன்கு ஊட்டமளிக்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மயிர்க்கால்களை நன்கு பலப்படுத்தி ஆரோக்கியமான மற்றும் விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

வெந்தயத்தில் ப்ரோட்டீன்ஸ் மற்றும் நிகோடினிக் ஆசிட் நிறைந்துள்ளன. இவை கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி கூடியவையாக இருக்கின்றன. வெந்தயம் கூந்தலுக்கு ஷைனிங்கை கொடுப்பதோடு முடியின் வேர்க்கால்களை நன்கு வலுவாக்குகின்றன. ஆரோக்கியமான கூந்தலுக்கு வெந்தய விதைகளை முன்தினம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை பேஸ்டாக அரைத்து முடியில் அப்ளை செய்தோ அல்லது கூந்தலை அலசவோ பயன்படுத்தலாம்.

புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது, pH அளவை சமநிலைப்படுத்துவதோடு, மயிர்க்கால்களுக்கு நன்கு ஊட்டமளிக்கிறது. இதன் மூலம் கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் கற்றாழை ஜெல்லானது நேச்சுரல் கண்டிஷனராகவும் செயல்பட்டு கூந்தலின் அமைப்பை மேம்படுத்துகிறது. கற்றாழையில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட் முடி உதிர்வை தடுக்க உதவும்.

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளில் வைட்டமின்ஸ் மற்றும் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வு பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கின்றன. இந்த பூக்களின் நேச்சுரல் கண்டிஷ்னிங் பண்புகள் கூந்தலை மென்மையாக்குகிறது. மேலும் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஹேர் மாஸ்க்ஸ், ஆயில்ஸ் போன்றவற்றில் செம்பருத்தி பூக்களை பயன்படுத்தலாம்.

வேப்பிலையில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இது ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. பொடுகு தொல்லைக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் தொற்றுகளை தடுப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேப்ப எண்ணெய் அல்லது வேம்பு கலக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு பொருட்கள் நம்முடைய ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை அளிக்கின்றன.

ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மேலே நாம் பார்த்த மூலிகைகளை பல DIY ஹேர் மாஸ்க்குகளில் அல்லது ஹேர் ஆயில்ஸ் அல்லது இன்ஃப்யூஷன்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம். மூலிகைகளை உங்கள் கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்து சீராக பயன்படுத்தினாலும் சமச்சீரான டயட், ஹைட்ரேட்டாக இருப்பது மற்றும் மன அழுத்தமின்றி இருப்பது உள்ளிட்டவை கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல இந்த மூலிகைகளை பயன்படுத்தும் முன் அலர்ஜிகள் ஏற்படும் என்பதை செக் செய்ய பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.

Related Posts

Leave a Comment