IMF ஐ விடவும் இந்தியாவே இலங்கைக்கு அதிகளவு உதவியது!

by Lifestyle Editor

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவு, இலங்கை பிரஜைகள் மத்தியில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்திய சீன உறவு மற்றும் இலங்கையுடான உறவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது
உலக நாடுகள் சிறிலங்காவை நோக்கித் திரும்பியது. ஆனால் இந்தியா மட்டுமே முதலில் உதவியது.
நான் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, எரிபொருள் வரிசைகள், உணவுப் பற்றாக்குறை மற்றும்
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்கு என்பவற்றை நான் நேரடியாகப் பார்த்தேன்.

எனது பயணத்தின் போது அவதானித்த மோசமான நிலை என்பதை குறிப்பிடுகின்றேன். சீனா எமது அண்டை நாடு,
போட்டி அரசியலில் இயற்கையாகவே அதில் பங்கு வகிக்கும். ஆனால் நாம் பயப்படக் கூடாது. உலகளாவிய அரசியல் ஒரு போட்டி விளையாட்டு. நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.

நெருக்கடியின் போது, சர்வதேச நாணய நிதியம் வழங்கிய உதவிகளை விடவும் இந்தியாவே அதிக நிதி உதவியை செய்தது. இலங்கைக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியது” இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment