திருமந்திரம் – பாடல் 1764: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம்

by Lifestyle Editor

நாலான கீழது ருவநடு நிற்க
மேலான நான்கு மருவமிகு நாப்ப
ணூலான வொன்று மருவுரு நண்ணலாற்
பாலா மிவையாவும் பரசிவன் தானே.

விளக்கம்:

உருவமாக கீழே இருக்கின்ற பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களாகவும், அருவுருவமாக நடுவில் இருக்கின்ற சதாசிவமூர்த்தியாகவும், அருவமாக மேலே இருக்கின்ற சத்தம் [நாதம்], வெளிச்சம் [விந்து], சக்தி, சிவம் ஆகிய நான்கு சக்திகளாகவும், இவை அனைத்தும் மிகுந்து இருக்கின்ற நான்கு விதமான மந்திரங்களால் பாடப் பெற்ற ரிக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு நூல்களாகிய வேதங்களின் மூலப் பொருளாகவும் இருந்து அருவங்களாகவும், உருவங்களாகவும், அருவுருவங்களாகவும், இவற்றை சார்ந்து இருக்கின்ற அனைத்துமாகவும் அருளுவது பரம்பொருளாகிய சிவம் ஒன்றே ஆகும்.

Related Posts

Leave a Comment