விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு கனிமொழி எம்.பி., மரியாதை!

by Lifestyle Editor

விஜயகாந்த் இல்லத்திற்கு தனது தாயாருடன் சென்று அவரது உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி., அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வ ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தினமும் ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு தனது தாயாருடன் சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் எம்.பி. கனிமொழி.

Related Posts

Leave a Comment