பழைய தோசைக்கல் புதுசுபோல பளபளக்க டிப்ஸ்!

by Lifestyle Editor

பல ஆண்டுகளாக இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு சமையல் பாத்திரங்கள் நம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக உள்ளன. இரும்புப் பாத்திரங்களைக் கொண்டு சமைப்பதால் நம் உணவில் இரும்புச் சத்து அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும் தவா போன்ற தட்டையான இரும்பு பாத்திரங்களில் எண்ணெய் சேர்த்து தோசை மற்றும் மற்ற உணவு பொருட்கள் சமைப்பதால் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவை தவாவின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும்.

இதனால் உங்கள் உணவின் தரத்தை இது பாதிக்கும். எனவே இரும்பு தவாவை தொடர்ந்து சுத்தம் செய்வது மிகவும் அவசியம். எனவே எவ்வாறு இரும்பு தவாவை எளிதாக சுத்தம் செய்யலாம் என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே உள்ளன…

டிப் 1 : இரும்பு தவாவை சுத்தமாக வைத்திருக்க சிறந்த வழிகளில் ஓன்று ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகும் அதைச் சரியாகக் கழுவுவது ஆகும். இது மேற்பரப்பில் அழுக்கு குவிவதைத் தடுக்கும்.

டிப் 2 : தவாவை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைத்தீர்கள் என்றால் அது எளிதாக துருப்பிடிப்பதற்கு வழிவகுக்கும்.

டிப் 3 : தவாவை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான ஸ்பான்ஜ் அல்லது ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தவும் அவசியம். இல்லையென்றால் தவாவின் மேற்பரப்பைக் கீறிவிட்டு மேல் அடுக்கை அகற்றிவிடும்.

டிப் 4 : எப்போதும் இரும்பு தவாவை உலர்ந்த இடத்தில் வைக்கவும். மேலும் கண்டிப்பாக அதன் மேல் கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.

வெந்நீர் : தவாவை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தவாவை தண்ணீரில் கொதிக்க வைப்பதால் அதில் குவிந்துள்ள உணவுத் துகள்கள் அனைத்தும் ஈசியாக தளர்ந்துவிடும். தண்ணீரை வடிகட்டிய பிறகு ஸ்பான்ஜ் பயன்படுத்தி தவாவை சுத்தம் செய்யுங்கள்.

தண்ணீர் மற்றும் வினிகர் : ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகரை சேர்த்து கரைசலாக தயார் செய்துகொள்ளுங்கள். அடுத்து ஒரு ஸ்பான்ஜ் எடுத்து இந்த கரைசலில் நனைத்து தவாவில் தடவி மெதுவாக ஸ்க்ரப்பிங் செய்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

எலுமிச்சை மற்றும் உப்பு : எலுமிச்சையை பாதியாக வெட்டி உப்பை தொட்டு தவாவில் தேய்த்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு ஸ்க்ரப்பர் மூலம் தவாவை நன்கு தேய்த்து கழுவவும். அடுத்து மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவி துணியால் துடைக்கவும்.

சூடான நீர் : தவாவில் ஒட்டியுள்ள உணவுத் துகள்களை எளிதாக உடைக்க தவாவை முதலில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு தவாவின் மேல் திரவ டிஷ் சோப்பை ஊற்றி ஸ்பான்ஜ் பயன்படுத்தி நன்கு தேய்த்து மீண்டும் சூடான நீரில் கழுவி மென்மையான துணியைப் கொண்டு துடைத்தால் தவா மீண்டும் பல பளப்பாக மாறிவிடும்.

பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீர் : தவாவில் உள்ள அகற்ற முடியாத கறைகளை கூட அகற்ற வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து இரும்பு தவாவில் தடவி சில நிமிடங்களுக்கு இந்த பேஸ்ட்டை ஊற வைத்துப் பின்னர் மென்மையான ஸ்பான்ஜ் கொண்டு ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் தவா சுத்தமாகிவிடும்.

Related Posts

Leave a Comment