உக்ரைனுக்கான ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது பிரித்தானியா..

by Lifestyle Editor

உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கப்படும் பிரித்தானியாவின் மிகப்பெரிய அறிவிப்பு இதுவென்றும் கூறப்பட்டுள்ளது.

நீண்ட கால பாதுகாப்பை ஆதரிக்கும் புதிய ஒப்பந்தத்தில் பிரதமர் ரிஷி சுனக் கையொப்பமிடுவர் என்றும் இந்த தொகுப்பு உக்ரைனுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவியில் நீண்ட தூர ஏவுகணைகள், வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி குண்டுகளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் 200 மில்லியன் பவுண்ட் சில ஆளில்லா விமானங்களுக்காக செலவிடப்படும் என்றும் அவற்றில் பெரும்பாலானவை பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனிதாபிமான உதவிக்காக 18 மில்லியனும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவுதல் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சிக்கான நிதியும் இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment