தமிழ் சினிமாவில் அதிக வருமான வரி செலுத்துபவர் இவர்தான்..

by Lifestyle Editor

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மகனுமான பிரபு தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். முதலில் தன்னுடைய தந்தை சிவாஜியுடன் சேர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர், அதன்பிறகு தனியாக நடிக்க தொடங்கி, பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். மேலும் இவர், மிஸ்டர் மெட்ராஸ், சின்னவர், சின்னத்தம்பி, பூ விழி ராசா, மைடியர் மார்த்தாண்டம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதோடு மலையாளம், தெலுங்கு போன்ற மற்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆனால் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரபு, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சிவாஜி ப்ரொடெக்‌ஷன் என்ற நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிறுவனம் அவருக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் பிரபு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 2 முதல், 3 கோடி ரூபாய் வரையில் சம்பளமாக பெறுகின்றார். மேலும் தலைநகர் சென்னையில் காம்ப்ளக்ஸ், திருமண மண்டபம் போன்ற வணிக கட்டிடங்களையும், சென்னை, டெல்லி, ஈரோடு, கோவை போன்ற பகுதிகளில் சொந்தமாக வீடுகளையும் வாங்கி வைத்திருக்கிறார்.

அதேபோல என்.சி.ஆர் வேஷ்டிகள், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவற்றின் மூலமாகவும் இவருக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அதேபோல பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்களையும் இவர் வைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இவருடைய சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் அதிக அளவிலான வருமான வரி செலுத்தும் தென்னிந்திய நடிகராகவும் இவர் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு இன்று தன்னுடைய 67-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.அவருடைய சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை அறிந்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கிறதா? என்று வாய்ப்பிளக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment