பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா…

by Lifestyle Editor

பிக்பாஸ் 7வது சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர்களுள் ஒருவர், விசித்ரா. இவர், ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பிக்பாஸ் :

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் கருத்துகள் விவாதத்திற்குரியதாக மாறுவதும், இன்னொரு பிரச்சனை வந்தவுடன் அந்த விவாதம் அப்படியே முடிந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த சீசனில், வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் தெரிந்த முகங்களை விட டிஜிட்டல் திரையில் தெரிந்த முகங்களை அதிகமாக பார்க்க கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் 90களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவராக இருந்த விசித்ரா, சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.இதையடுத்து, பிக்பாஸிற்குள்ளும் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.

விசித்ராவின் சம்பள விவரம் :

தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் இருக்கும் போட்டியாளர்களுள் அதிக வயதுடையவர் விசித்ராதான். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடனும் சண்டை போட்டு வம்பு வளர்த்தாலும் பின்னர் அம்மா செண்டிமெண்டால் அனைவரையும் தாக்கி விடுகிறார்.

இந்த வீட்டிற்கு வந்த புதிதில் “ஏண்டா இங்க வந்தோம்..” என்று துக்கத்தில் இருந்த இவர், அடுத்த வாரமே அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார்.

விசித்ரா, ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். மக்களின் ஆதரவை பெரும்பாலும் பெற்றுள்ள போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். குறித்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களை வாயடைத்துப்போக வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment