இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 17, 2023 ஞாயிற்றுக்கிழமை

by Column Editor

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.12.2023, சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.55 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி நட்சத்திரம் : இன்று காலை 07.57 வரை திருவோணம். பின்னர் அவிட்டம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்

நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தில் நிதானமாக வேலை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். திட்டமிட்டு வெளியூர்ப் பயணங்கள் சென்று வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். நிலையான வருமானத்தை ஏற்படுத்த, வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்.

ரிஷபம்

கட்டுமானத்துறையில் புதிய முறைகளைக் கையாளுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை அதிகரிப்பீர்கள். விரும்பிய பெண்ணுக்கு காதல் தூது விடுவீர்கள். பூர்வீகச் சொத்தை அடைவீர்கள். அரசுப்பணியாளர்கள் சிறப்பான நிலைக்கு உயர்வீர்கள். வங்கிக்கடன் தடையின்றி வாங்குவீர்கள்.

மிதுனம்

தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். பாதிப்படைந்த வீட்டை பழுது பார்த்து புதுப்பிக்கும் வேலை பார்ப்பீர்கள். கோபித்துக் கொண்டு தாய் வீடு போன மனைவியை அழைத்து வருவீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களின் ஒத்தாசையால் உற்சாகமடைவீர்கள்.

கடகம்

முணுக்கென்று கோபப்படுவதை மூட்டைகட்டி வைக்காவிட்டால் நல்ல உறவுகளை இழப்பீர்கள். தொழிலுக்கான பயணங்களில் அதிக பயன் பெற மாட்டீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் சரிவை சந்திப்பீர்கள். மாடிப்படிகளில் தடுமாறி காயமடைவீர்கள். மனைவியின் மனதை நோகடிப்பீர்கள். சந்திராஷ்டம நாள். யாரிடமும் கோபமாக பேசாதீர்கள்.

சிம்மம்

தொழில் துறைகள் சிறப்பாக இருந்தாலும் கவலையால் மனம் பாதிப்படைவீர்கள். வாக்கு தவறியதால் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்வீர்கள். வேலை இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அதிகம் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள்.

கன்னி

வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முட்டுக்கட்டையை எதிர் நோக்குவீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சுணக்கத்தை காண்பீர்கள். அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். தங்கையின் கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி செய்வீர்கள்.

துலாம்

உயர்கல்விக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப முயற்சி எடுப்பீர்கள். உறவுகளில் இருந்த சங்கடங்களை விலக்கி நெருக்கம் ஏற்படுத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாக்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வேலை நிமித்தமாக வெளியூரில் தங்குவீர்கள். கடன் சுமையால் தவிப்பீர்கள்.

விருச்சிகம்

ஏக்கத்தோடு இருக்கும் உங்களின் நோக்கத்தை நண்பர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். தோப்புக் குத்தகை மூலமாக கணிசமான வருமானம் பெறுவீர்கள். வீட்டு வாடகையை சேமிப்பாக மாற்றுவீர்கள். காதலியின் படிப்புக்காக செலவு செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு

பங்குச்சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள். உங்கள் வேலையை காலி செய்ய உடனிருப்பவர்களே குழி பறிப்பார்கள். தொழில் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும். சகோதர சகோதரிகளால் பிரச்சனையை சந்திப்பீர்கள். அவற்றைத் தீர்க்க பாடுபடுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கி அதிகம் செலவு செய்வீர்கள்.

மகரம்

வியாபாரத்தில் சாமர்த்தியமாக வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனமாக வேலைசெய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் மத்தியில் மரியாதை அடைவீர்கள். மருத்துவர்கள் மகத்தான பெருமை பெறுவீர்கள். கை வலிக்காக நுட வைத்திய சாலையில் கட்டு போடுவீர்கள். எதிரிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவீர்கள்.

கும்பம்

“லொட லொட வென்று பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் பணம் கொடுக்காதீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட ஆசைப்படாதீர்கள். ஆன்லைன் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள். நிறுத்தும் வாகனத்தை பூட்ட மறக்காதீர்கள். அரசாங்க ஆதரவு பெறுவீர்கள்.

மீனம்

உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அதற்காக அவசரப்பட்டு வேலையை விட்டு விடாதீர்கள். குடும்பச் சுமையைத் தீர்க்க பணிச்சுமையை ஏற்றுக் கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மனக்கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். காதலியின் பேச்சால் டென்ஷன் ஆவீர்கள்.

Related Posts

Leave a Comment