முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புயல் பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் மோடி!

by Lifestyle Editor

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புயல் பாதிப்பு மற்றும் மழை வெள்ளம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

Related Posts

Leave a Comment