சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம்!

by Lankan Editor

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி அதிபர் ஆசிரியர் சங்கத்தினால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை மறித்து பொல்துவ சந்தியில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆசிரியர் – அதிபர் சங்கப் பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வீதியும் முற்றாக தடைப்பட்டிருந்தது.

Related Posts

Leave a Comment