மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் விழா ..

by Lifestyle Editor

மன்னார் பிரதேச செயலகத்தி மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி மாற்று திறனாளிகள் தின விழா இடம்பெற்றுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்த இந்த விழா மன்னார் கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேசச் செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.மகேஸ்வரன்,மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ்,மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் மறுவாழ்வு சங்க இயக்குனர் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி உட்பட மாணவர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Comment