மிக்ஜாம் புயலால் எச்சரிக்கை..!

by Lifestyle Editor

மிக்ஜாம் புயல் கரையை கடப்பதால் சென்னை, திருவள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் நான்காம் தேதி மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர கடற்கரையோரம் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே புயல் கரையை கடக்கும் வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment