புதுவையில் 332 ஆண்டு பழமை வாய்ந்த ஜென்மராகினி ஆலய கொடியேற்ற விழா…

by Lifestyle Editor

புதுச்சேரி நகரப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம் உள்ளது. பேராலயத்தின் 332-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் மாலை தொடங்கியது.

முன்னதாக ஆண்டு பெருவிழாவையொட்டி பேராலயத்தில் புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து அன்னையின் கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

Leave a Comment