இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்புகிறது பிரித்தானியா!

by Lifestyle Editor

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானியா இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடா பகுதிக்கு அனுப்ப உள்ளது.

‘வகை 45 டிஸ்ரோயர்’ HMS டயமண்ட் போர்க்கப்பல், HMS லான்காஸ்டர் என்ற போர்க்கப்பலுடன் இணைவதற்கான வழியில் உள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ், ‘இப்பிராந்தியத்தில் எங்களின் இருப்பை பிரித்தானியா வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது’ என கூறினார்.

கூடுதலாக, ஐரோப்பாவின் முக்கியமான கடலுக்கடியில் உள்ள கேபிள்களைப் பாதுகாக்க, பிரித்தானியா தலைமையிலான பணிக்குழு விரைவில் ஆங்கிலக் கால்வாயிலிருந்து பால்டிக் கடல் வரை ரோந்துப் பணியைத் தொடங்க உள்ளது.

HMS லான்காஸ்டர் கடந்த ஆண்டு முதல் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு டிஸ்ரோயர் சேர்ப்பது ஆபத்தான நேரத்தில் பிராந்தியத்தில் தடுப்பை மேம்படுத்தும் என்று ஷாப்ஸ் கூறினார்.

Related Posts

Leave a Comment