நடிகர் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்க திட்டம்

by Column Editor

நடிகர் விஜயகாந்துக்கு சுவாசத்தை எளிதாக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது . இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்துக்கு சுவாசத்தை எளிதாக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். நுரையீரலுக்கு குழாய் அமைத்து வெண்டிலேட்டரில் ஆக்சிஜனை வழங்குவதே டிரக்கியாஸ்டமி. இதன்மூலம் சுவாசத்தின்போது நுரையீரலை சீராக வைத்திருக்க டிரக்கியாஸ்டமி சிகிச்சை உதவும். விஜயகாந்த் சுவாசிக்க சிரமப்படுவதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment