முடி உதிர்வை தடுத்து நிறுத்த..!

by Lifestyle Editor

தலைமுடி வளர்ச்சி என்பது சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். அதேபோல்தான் தலை முடி உதிர்தல் என்பதும் அன்றாடம் நிகழக்கூடிய ஒரு சாதாரண செயல்தான். அதே செயல் தன்னுடைய அளவை மீறி அதிகமாக முடி உதிர்தல் ஏற்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட மாதத்திற்குள் குறிப்பிட்ட அளவு முடி வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ அது பிரச்சனைக்குரியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சினையை நீக்குவதற்குரிய ஒரு எளிமையான ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரின் முடி உதிர்தல் என்பது ஒரு நாளைக்கு 10 முதல் 20 வரை இருந்தால் அது சாதாரண முடி உதிர்வு என்று அர்த்தம். அதைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இதேபோல் முடி வளர்ச்சி என்பது ஒரு மாதத்திற்கு ஒரு இன்ச் இருந்து மூன்று இன்ச் வரை சாதாரணமாக வளரும். அதைவிட குறைவாக வளரும் பொழுது அவர்களுக்கு முடி வளர்ச்சியில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.

தலைமுடி வளர்ச்சி என்பது சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். அதேபோல்தான் தலை முடி உதிர்தல் என்பதும் அன்றாடம் நிகழக்கூடிய ஒரு சாதாரண செயல்தான். அதே செயல் தன்னுடைய அளவை மீறி அதிகமாக முடி உதிர்தல் ஏற்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட மாதத்திற்குள் குறிப்பிட்ட அளவு முடி வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ அது பிரச்சனைக்குரியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சினையை நீக்குவதற்குரிய ஒரு எளிமையான ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரின் முடி உதிர்தல் என்பது ஒரு நாளைக்கு 10 முதல் 20 வரை இருந்தால் அது சாதாரண முடி உதிர்வு என்று அர்த்தம். அதைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இதேபோல் முடி வளர்ச்சி என்பது ஒரு மாதத்திற்கு ஒரு இன்ச் இருந்து மூன்று இன்ச் வரை சாதாரணமாக வளரும். அதைவிட குறைவாக வளரும் பொழுது அவர்களுக்கு முடி வளர்ச்சியில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.

இவை இரண்டையும் சரி செய்வதற்கு நாம் ஒரே ஒரு ஹேர் பேக்கை உபயோகப்படுத்தினால் போதும். இந்த ஹேர் பேகிற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் தான் தேவைப்படுகிறது. ஒன்று வெந்தயம் மற்றொன்று முருங்கைக்கீரை. வெந்தயம் என்பது நம் தலைக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. உடல் உஷ்ணத்தினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுக்கக்கூடிய ஆற்றலும் பொடுகு பிரச்சனைகள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் வெந்தயத்திற்கு இருக்கிறது. வெந்தயத்தை குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக முருங்கைக்கீரையில் பலவிதமான சத்துக்கள் இருக்கின்றது என்றும் அதை தினமும் நாம் உணவில் எடுத்துக் கொண்டால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த முருங்கைக் கீரையை நம் தலைக்கு நாம் உபயோகப்படுத்தும் பொழுது அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நம் தலையில் உரியப்பட்டு முடியானது உறுதியாகவும் வலுவாகவும் அதே சமயம் வேகமாகவும் வளரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இப்பொழுது ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக்கொண்டு அதில் நாம் ஊற வைத்திருக்கும் வெந்தயத்தையும் சேர்த்து போட்டு நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசிக்கொள்ள வேண்டும். இதில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் நாம் இவ்வாறு தலையை அலசும் பொழுது இந்த பேக் முற்றிலுமாக நம் தலையில் இருந்து நீங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் அலச வேண்டும். அவ்வாறு நீங்காமல் இருக்கும் பொழுது அதனால் நமக்கு பொடுகு பிரச்சனையோ முடி உதிர்தல் பிரச்சனையோ ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இது இந்த பேக்கிற்கு என்று மட்டும் இல்லை நாம் தலைக்கு எந்த பேக் உபயோகப்படுத்தினாலும் அதை முற்றிலுமாக நாம் அலசினால் தான் நம் தலைமுடிக்கு அதனால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment