மொறு மொறு சிறுதானிய கட்லெட்..

by Lifestyle Editor

குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது என்பதை காற்றுடன் சேர்ந்து பயணித்து நம்மை தழுவும் குளிர் நமக்கு நினைவுப்படுத்துகிறது. உங்களை புத்துணர்ச்சியோடு உணர வைக்க உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டிய நேரம் இது. இந்த சீசனில் உங்களது டயட்டில் கட்டாயமாக சிறுதானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

சிறுதானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற நமது உடலுக்கு அத்தியாவசியமான அத்தனை ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்தின் பவர் ஹவுஸ் ஆக திகழக்கூடிய இந்த சிறுதானியங்கள் நாம் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதற்கும், நம்மை ஆக்டிவாக வைப்பதற்கும், கதகதப்பாக இருப்பதற்கும் உதவக்கூடியவை

பெரும்பாலானவர்களுக்கு குளிர் காலங்களில் செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். அதிக நார்ச்சத்து நிறைந்த காரணத்தினால் இந்தப் பிரச்னையை சிறுதானியங்கள் நீக்குகிறது. கேழ்வரகு, கம்பு, சோளம், தினை அரிசி போன்ற சிறுதானிய வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் சுவையாகவும் இருக்கின்றன.

சிறுதானியங்களில் காணப்படும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலை பொறுமையாக வெளியேற்றுவதன் காரணமாக நமக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

வழக்கமான முறையில் நீங்கள் கேழ்வரகு சாப்பிட்டு வருவது உங்களுக்கு ஆரோக்கியமான எலும்பு, சிறந்த சருமம் போன்றவற்றை பெற உதவுகிறது. ஏனெனில் கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து காணப்படுகிறது. கூடுதலாக இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் அமைகிறது. ஆகவே குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு கேழ்வரகு ஒரு அற்புதமான சாய்ஸ்.

தேவையான பொருட்கள் :

1/2 கப் – தினை அரிசி உப்புமா

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவை – (1 வேக வைத்த சக்கரவள்ளி கிழங்கு, 1 நறுக்கிய பச்சை மிளகாய், ½ நறுக்கிய வெங்காயம்)

1 – துருவிய கேரட்

1 – துருவிய நூல்கோல்

1/2 – துருவிய காலிஃபிளவர்

தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை கரம் மசாலா

செய்முறை:

* இப்பொழுது தினை அரிசியை ஒரு வாணலில் சேர்த்து அதனை வறுக்கவும். பின்னர் பேக்கேஜில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அதில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

* தினை அரிசி தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து உப்புமாவை தனியாக வேறு ஒரு தட்டிற்கு மாற்றி ஆரம்பிக்கவும்.

* கேரட், நூல்கோல் மற்றும் காலிஃப்ளவரை துருவி எடுத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் வரை 10 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.

* வெளியேற்றப்பட்ட தண்ணீரை பிழிந்து அப்புறப்படுத்தவும்.

*இதனோடு சர்க்கரைவள்ளி கிழங்கு கலவை மற்றும் தினை அரிசி உப்புமாவை சேர்க்கவும்.

* மசாலா பொருட்களை சேர்த்து உங்கள் கைகளால் அனைத்து பொருட்களையும் நன்றாக பிசையவும்.

* இந்த கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக பிடித்து பிறகு லேசாக அதனை தட்டி தோசை கல்லில் போட்டு ஷேலோ ஃப்ரை செய்யவும்.

* இருபுறமும் பிரவுனாக மாறும் வரை அதனை சமைக்கவும்.

* இந்த கட்லெட் உடன் ரைத்தா சேர்த்து பரிமாறவும்.

* மாலை நேரத்தில் சூடான டீயுடன் சாப்பிடுவதற்கு இந்த கட்லெட் அட்டகாசமாக இருக்கும்.

இதில் சொல்லப்பட்டுள்ள காய்கறிகளைதான் நாம் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு விருப்பமான எந்த ஒரு காய்கறியை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment