எளிமையான ஐந்து அழகு குறிப்புகள்..

by Lifestyle Editor

வீட்டில் இருக்கும் பெண்களை விட வேலைக்கு செல்லும் பெண்களின் சருமம் அதிக அளவு பாதிக்கிறது. இதனால் அவர்கள் எப்பொழுதும் முகத்தை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வேண்டும்.

1. துளசி அல்லது வேம்பு இந்த இரண்டு பொருட்களை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த தண்ணீரை வடிகட்டி வைத்து அதில் முகத்தை கழுவுவது நல்ல பலனை தரும். இப்படி முகத்தை சுத்தம் செய்த பிறகு குளிர்ந்த நீர் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி முகத்தை டோன் செய்யலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சியாவதுடன் தோளின் மேற்பரப்பில் ரத்த ஓட்டத்தை தூண்டி முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும். இதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லையும் முகத்தில் போடலாம்.

2. அடுத்து முகத்தை நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது ஸ்கிரிப் செய்ய வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக வெளியேறும். இந்த ஸ்க்ரப்பிங்காகவும் நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டாம். பாதி தக்காளியை நறுக்கி அதில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் லேசாக தேய்த்துக் கொடுங்கள் அதுவே போதும். தக்காளிக்கு பதிலாக கற்றாழையும் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஏதேனும் ஒரு ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த பேஸ் மாஸ்க்கிற்கும் அதிக செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் அரிசி மாவு, கடலை மாவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தயிர், மஞ்சள் சேர்த்து எளிமையான முறையில் பேக் போட்டுக் கொள்ளலாம். இதை உறங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக போட்ட பின்பு முகத்தை அலம்பி விட்டு உறங்கி விடலாம்.

3. இவற்றுடன் தினமும் உறங்கும் பொழுது முகத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் ஆயில் இதில் ஏதேனும் ஒன்றை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு உறங்க சொல்வது முகத்திற்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து முகம் பொலிவாக இருக்க உதவி செய்யும். இது உதடு கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், உதடு கருப்பாவது போன்றவை எல்லாம் கூட சரியாகும். இந்த எளிமையான குறிப்புகளை பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது எப்பொழுதும் அழகாக இருப்பதுடன் தன்னம்பிக்கையுடன் வரலாம்.

Related Posts

Leave a Comment