கார்த்திகை ஞாயிறு விரதத்தின் சிறப்புகள் ..!

by Lifestyle Editor

கார்த்திகை ஞாயிறு தினத்தில் விரதம் இருந்தால் சிவன் மற்றும் சக்தியின் அருளை நேரடியாக பெறலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை கார்த்திகை ஞாயிறு வருவதை எடுத்து அன்றைய தினம் சிவன் பார்வதியை நினைத்து விரதம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு அதனை தொடர்ந்து 12 வாரங்கள் விரதத்தை கடைப்பிடித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவன் மற்றும் சக்தியின் அருள் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து பயபக்தியுடன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் சிவ சக்தியின் ஆசி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கையில் நீராடினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் அனைத்து நாட்களிலும் சிவன் விஷ்ணு பூஜை செய்தால் மகிழ்ச்சி உண்டாகும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Comment