நலம் தரும் அத்திப்பழம்!

by Column Editor

அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்தோ, பாலில் கலந்து மில்க் ஷேக்காகவோ குடிக்கலாம். அத்திப்பழம் ஷேக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

விலைக்குறைவாக பல ஆரோக்கியங்களுடன் கிடைக்கும் பழங்களில் அத்திப்பழம் முக்கியமானது. அத்திப்பழத்தை காய வைத்து தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். அப்படியே பழமாகவோ, மில்க் ஷேக் போன்றோ செய்தும் சாப்பிடலாம். பொதுவாக குழந்தைகள் மில்க் ஷேக் போன்ற பானங்களை விரும்புவதால் அத்திபழ ஷேக் செய்து கொடுக்கலாம்.

அத்திப்பழம் ஷேக் குடிப்பது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்திப்பழத்தில் தயாரிக்கப்படும் மில்க் ஷேக் இரத்த சோகையை தடுக்கிறது. மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

எலும்புகளை வலுவாக வைத்திருக்க அத்தி பால் ஷேக் பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சாதாரண இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும். அல்சைமர் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும்.

அத்திப்பழம் சாப்பிடுவது மாரடைப்புக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Related Posts

Leave a Comment