கார போண்டா ரெசிபி…!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி – 1 கப்
உளுந்து – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – 1 tsp
பெருங்காயத்தூள் – 1/2 tsp
எண்ணெய் – 200 கிராம்
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – 1 கைப்பிடி

செய்முறை :

அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசிவிட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அந்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு என சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

பாசிபருப்பு, ஜவ்வரிசி பாயாசம்… ட்ரை பண்ணி பாருங்க…

பின் கடாயில் எண்ணெய் வைத்து அது சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

பின் அவை பொன்னிறமாக வரும் வரை வறுத்து கிண்ணத்தில் போட வேண்டும். இதற்கு காரச்சட்னி, தேங்காய்சட்னி பொருத்தமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment