மீண்டும் மின் விநியோகத் தடை?

by Editor News

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதனை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், முழுமையான அளவு நீர்மின்னுற்பத்தி இடம்பெறுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதில் முன்னோட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment