242
			
				            
							                    
							        
    பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுகின்றது.
எனினும் வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம்” இவ்வாறு அஜித் குணசேகர தெரிவித்தார்.
