சிக்கன் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க..!!

by Lifestyle Editor

வறுத்து அரைக்க..

கல்பாசி – 2
பிரிஞ்சு இலை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
அன்னாசி பூ – 1
மராதிமொக்கு – 1
பட்டை – 1 துண்டு
சீரகம் – 1 tsp
தனியா – 2 tsp
சோம்பு – 1/2 tsp
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – சிறிதளவு
துருவிய தேங்காய் – 1 கப்

குழம்பு வைக்க

கோழி கறி – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
எண்ணெய் – 2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
மிளகாய் தூள் – 1/2 tsp
உப்பு – தே.அ
புளிக்காத தயிர் – 2 tbsp
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

கடாய் வைத்து வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளுங்கள். பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

தேங்காயையும் தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.பின் பேஸ்டாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்

கடாய் வைத்து எண்ணெய் விட்டு அரைத்த பொடியை சேர்த்து வதக்குங்கள். அதோடு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.

அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டுங்கள்.

சுத்தம் செய்த கறியை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக போதுமான தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

கொதித்து கொஞ்சம் கறி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் அருமையான சிக்கன் குழம்பு தயார்.

Related Posts

Leave a Comment