ஐயர் வீடுகளில் செய்யப்படும் சுவையான குலைந்த வெண்பொங்கலை செய்வது எப்படி..ரெசிபி

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 3/4 கப்

பாசி பருப்பு – 1/4 கப்

பச்சை மிளகாய் – 1

நெய் – 1/4 கப்

முந்திரி பருப்பு – 10

இஞ்சி – சிறிய துண்டு

மிளகு – 1 1/2 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தண்ணீர் – 3 கப்

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பச்சரிசி மற்றும் பாசிபருப்பை நன்றாக அலசி 30 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து குக்கரில் பிரஷர் தானாக அடங்கும் வரை விட்டுவிடவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளவும்.

இவை நன்றாக பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அவற்றுடன் முந்திரி சேர்த்து வறுத்து சிவந்தவுடன் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் மூடியை திருந்து மீண்டும் அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் வைத்து தாளித்த அனைத்து பொருட்களையும் பொங்கலுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும்.

அவ்வளவுதான் சுவையான வெண் பொங்கல் ரெடி. இதை நீங்கள் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறினால் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

Related Posts

Leave a Comment