கருஞ்சீரக எண்ணெயை உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் ….!

by Lifestyle Editor

முடி உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தலைமயிர் வேர்க்கால்களின் வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி முளைக்க உதவுகிறது.

இப்போது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கருஞ்சீரக எண்ணெயை தயாரிக்கும் முறை :

தேவையானப் பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்- 100ml

கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

வெந்தயம்- 1 ஸ்பூன்

செய்முறை :

ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயத்தையும் கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன்பின்னர் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.

பின்னர் ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வர முடி கருகருவென நீளமாக வளரும்.

Related Posts

Leave a Comment