அடக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல் …

by Lifestyle Editor

அடக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ள நிலையில் இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடு குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டணம் ரூபாய் 8.15 என இதுவரை இருந்த நிலையில் இன்று முதல் அது ரூ.5.50 என குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

Related Posts

Leave a Comment