ஐப்பசி பெளர்ணமி சிறப்புகள் …

by Lifestyle Editor

ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபிஷேகம் அரிய வழிபாடு ஆகும். இதைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் சிவன் கோயிலுக்கு வருவார்கள். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் என்பது ஐதீகமாகும்.

ஐப்பசி மாத பௌர்ணமியானது, நாளை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும்.

திருவண்ணாமலை என்றவுடன் அண்ணாமலையாரின் ஆன்மீக பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம்தான். திருவண்ணாமலை கிரிவல பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் பல லட்சம் பக்தர்களும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து செல்வது வழக்கம் .

Related Posts

Leave a Comment