132
ஆயுத பூஜையை முன்னிட்டு ரோபோவொன்று தீபாராதனை செய்யும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரிப் பூஜையானது வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வேலூரில் செயற்பட்டுவரும் தனியார் பல்கலைக்கழக மொன்றில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி அங்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த சாமிப்படங்களுக்கு ரோபோவொன்று தீபாராதனை செய்யும் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த ரோபோவினை அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ரோபோடிக் பிரிவினை சேர்ந்த மாணவர்களே கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.