ஆத்தாடி.. இந்த அழகில் சொக்கித்தான் போயிட்டோம்.. காஜல் அகர்வாலின் ஹாட் போட்டோஸ்!

by Lankan Editor

நடிகை காஜல் அகர்வால் கறுப்பு உடையில் கலக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு டாப் நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு டாப் நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

திருமணம்: படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து இவருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். இந்தியன் 2: நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு குழந்தை பிறந்து விட்டதால், இந்தியன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அதை பொய்யாக்கும் வகையில் படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட்டுகளை செய்து புதுப்பொலிவுடன் கம்பேக் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

வில்லியாக: தற்போது காஜல் அகர்வால், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் வில்லியாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமெளலி பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் என பல பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரின் அடுத்த படைப்பிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், அந்த படத்தில் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

சொக்கி போயிட்டோம்: இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்பு உடையில் பளபளனு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி என்ன அழகு என்றும் இந்த அழகில் சொக்கித்தான் போயிட்டோம் என்று காஜல் அகர்வாலை புகழ்ந்து வருகின்றனர்.

 

 

 

 

Related Posts

Leave a Comment