இந்திய சினிமா வரலாற்றில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

by Lifestyle Editor

இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டானால் நடிகர்கள் சம்பளத்தை கோடியாக உயர்த்துகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் முன்பு ஒரு கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பது பல நடிகர் நடிகைகளின் கனவாக இருந்தது.

ரஜினி, கமல் போன்ற பழம்பெரும் நடிகர்களால் கூட அக்காலத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கமுடியவில்லை. ஏனெனில் இவர்களுக்கு முன் நடிகர் ராஜ்கிரண் தான் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கினார்.

அதன் பிறகுதான் ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களால் அந்த உயரத்தை எட்ட முடிந்தது.

அந்தவகையில், இந்திய சினிமா வரலாற்றில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா? அவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி, 1980-களில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் – இந்தியன் கதாநாயகியாக வலம் வந்தார்.

ஸ்ரீதேவி இந்தி படத்துக்கு சம்பளமாக ரூ.1 கோடி ரூபாய் வாங்கினார்.

இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவியை தமிழில் முதலில் இயக்குனர் கே.பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தின் மூலம் முதலில் கோலிவுட்டில் அறிமுகமானார். அவர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது சம்பளம் ரூ.2 ஆயிரம் மட்டுமே. ஆனால் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவிக்கு முதல் படத்திலேயே ரூ. 5 ஆயிரம்.

ஸ்ரீதேவி பிஸியாக இருப்பதைப் பார்த்து ஒரு இந்திப் படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.

Related Posts

Leave a Comment