பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்குமா பெங்களூரு …

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணியும் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லப்போகும் அணிகள் எது என்பது இதுவரை தெரியவில்லை. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த மூன்று இடத்திற்கு 5க்கும் மேற்பட்ட அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில், பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் பின்தங்கி இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

இதேபோல் பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ரன்-ரேட்டில் வலுவான நிலையை எட்டிய பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் நுழையலாம். ஒரு போட்டியில் தோற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் என்பதால் அந்த அணிக்கு இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment