டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை ..

by Lifestyle Editor

நாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் சிறுவர்களுக்கான டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் டெங்கு நோய்க்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்த ஆய்வின் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்த தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்த டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment