விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை ..

by Lifestyle Editor

நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைக்கு தீர்வை காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து இருப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக அரசாங்க ஊழியர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற வேண்டிய நிலை காணப்படுவதாலும் வைத்திய நிபுணர்கள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதாலும் இப்பற்றாக்குறை காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று, காத்தான்குடி, கல்முனை, கிண்ணியா, ஏறாவூர், திருகோணமலை, கந்தளாய், கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட பல வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது கிராமப்புற வைத்தியசாலைகளில் மாத்திரம் காணக்கூடியதாக உள்ள இந்த பற்றாக்குறை எதிர்காலத்தில் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளிலும் உருவாகலாம் என்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment